சபரிமலை விவகாரம்-கால அவகாசம் கோரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு - Agnipuratchi

சபரிமலை விவகாரம்-கால அவகாசம் கோரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு

Share This

கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது குறித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுக்கள் ஜனவரி 22ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. அந்த வசதிகளை சபரிமலையில் ஏற்படுத்தும் வரை பெண்களை அனுமதிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவை பொருத்தே சபரிமலையில் இனிவரும் நாட்களில் சுமூக நிலை ஏற்படுமா⁉என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages