இளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்திய தனியார் விடுதிக்கு சீல் வைப்பு - Agnipuratchi

இளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்திய தனியார் விடுதிக்கு சீல் வைப்பு

Share This

சென்னை அரும்பாக்கம் நூறடி சாலையில் இயங்கி வந்த மதுபான விடுதிக்கு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது மது விடுதிகளில் அனுமதிக்கப்படாத நிலையில் சட்ட விரோதமாக பாடல்களை சத்தமாக ஒலிக்கவிட்டு இளைஞர்களும், இளம் பெண்களும் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹோட்டல் மேலாளர் உட்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களில் 7 பேர் பெண்கள். அந்த 7 பெண்களும் மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த தனியார் ஹோட்டலின் மதுபான விடுதிக்கு போலீசார் சீல் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages