திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் - Agnipuratchi

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்

Share This

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த திருவாரூர் தொகுதி, அவர் மறைந்த பின் காலியாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த காலி தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று நடந்த இதன் விசாரணையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இடைத்தேர்தல் குறித்து பதில் மனு அளித்தார். அதில், பிப்ரவரி 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது பற்றி முடிவெடுக்க முடியாது என்றும் அதில் தீர்ப்பு வந்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages