திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் - Agnipuratchi

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

Share This

திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் சிறப்புடன் நடைபெற்று வந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நேற்று முன்தினம் 2668 அடி உயர மலையில் ஏற்றப்பட்டது. தீப உற்சவம் முடிந்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கோயிலில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியை இறக்கினர். கொடியிறக்கத்துடன் 10 நாட்களாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழா முடிந்தது. இந்நிலையில் தீபத்திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து அண்ணாமலையார் கிரிவலம் வருவதும் வழக்கமாகும். அதன்படி நேற்று காலை 6 மணியளவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் எதிரே எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அங்கிருந்து கிரிவலம் புறப்பட்டனர். தொடர்ந்து 14.5 கிலோ மீட்டர் மலையை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages