தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். மலேஷியாவைச் சேர்ந்த பொருளாதார அமைப்புகளான உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய பொருளாதார மன்றங்கள் சார்பிலான இந்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொழில் துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் தொழில் துவங்க அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார். தொழில்களுக்கு தேவையான தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு சிறப்பான முறையில் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வட்டமேசை மாநாட்டை ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment