கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் ஆய்வு-கஞ்சா, சிம்கார்டுகள் பறிமுதல் - Agnipuratchi

கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் ஆய்வு-கஞ்சா, சிம்கார்டுகள் பறிமுதல்

Share This

தமிழகத்தில் உள்ள மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் டிஐஜி ஜெயபாரதி தலைமையில் துணை கண்காணிப்பாளர் மற்றும் 5 ஆய்வாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிறை வளாகம், கைதிகளின் அறைகளில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ⛓கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போன் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, முன்னதாக கடந்த மாதம் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல இங்கு அடுத்தடுத்து கைதிகள் மரணமடைந்துள்ளனர். இதுவும் இந்த சோதனைக்கு ஓர் காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages