சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது - Agnipuratchi

சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

Share This

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போது அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் கடந்த 25ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தற்போது சத்துணவு பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விரைவில், இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages