மெரினாவில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸார் தங்களது விசாரணையை துவங்கிய நிலையில், அந்த பெண் இறந்து கிடந்த இடத்தில் அவரது மொபைல் போன், 4 ஜோடி செருப்பு, மது பாட்டில்கள் இருந்துள்ளது. இந்த போன் நம்பரை வைத்து திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி புருஷனிடம் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை பிரிந்து சென்னைக்கு வந்து மெரினாவில் விபச்சாரம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது தான் அவருக்கு வினோத்குமாரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருசமயம் கலைச்செல்வி தனது தோழி ஒருவரை வினோத்குமாரிடமும் அவரது நண்பர்களிடமும் அறிமுகம் செய்துள்ளார். அந்த பெண் அழகாக இருந்ததால், வினோத்குமார் மற்றும் அவரது நண்பர் சூர்யா, கலைச்செல்வியுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று, கலைச்செல்வி, வினோத்குமார், சூர்யா ஆகிய மூவரும் மெரினாவில் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார்கள். அப்போது கலைச்செல்வி என்னுடன் ஏன் பழைய மாதிரி பழக மாட்டிங்கிறீர்கள் என மீண்டும் கேட்டுள்ளார். போதையில் இருந்த வினோத்குமார், சூர்யா இதனால் கடுப்பாகி பீர் பாட்டிலை எடுத்து கலைச்செல்வியை அடித்து கொலை செய்து அவரை அங்கேயே புதைத்துவிட்டு சென்றுள்ளனர். போலீஸார் அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மெரினாவில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் விவரம் வெளியானது -இருவர் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment