சென்னை மாநகராட்சி மக்களின் வசதிகளுக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைமேம்பாலமும், அதேபோன்று போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்வதற்கு எதுவாக மேம்பாலம் அமைக்கவும் சென்னை மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலிருந்து அண்ணாசாலை வழியாக தியாகராய சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 121.80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. மேலும் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதே போல, சென்னை தியாகராய நகர் பகுதியில் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள்ளது. இந்த நடைமேம்பாலம் 28 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்'-சென்னையில் இரு பாலங்கள் அமைக்க மாநகராட்சி ஒப்புதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment