டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

Share This

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்ககடலில் உருவான கஜா புயல் கடந்த வெள்ளியன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்ததில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages