கஜா புயல் பாதிப்புக்கான ரூ.1000 கோடி நிதியுதவி-அரசாணை வெளியீடு - Agnipuratchi

கஜா புயல் பாதிப்புக்கான ரூ.1000 கோடி நிதியுதவி-அரசாணை வெளியீடு

Share This

கஜா புயல் நிவாரணத்திற்காக அறிவிக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாகப்பட்டினம் அருகில் கஜா புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக உயிர்ச்சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. எனினும், 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து நிவாரணப் பணிகளுக்கு ரூ.13,000 கோடி நிதி கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages