கர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஷிமோகா தொகுதியில் தன் மகன் ராகவேந்திரா வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதேபோல் பெல்லாரி, ஜம்கண்டியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.
கர்நாடகாவில் இடைத்தேர்தல்-வாக்குப்பதிவு துவக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment