புது தலைமை செயலக கட்டிட விவகாரம்-விசாரணை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை - Agnipuratchi

புது தலைமை செயலக கட்டிட விவகாரம்-விசாரணை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

Share This

புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு புகார் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் போது, உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிரான ஸ்டாலின் உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை விசாரணையின் போது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இதுவரை எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என தி.மு.க. தரப்பிலும், ஆரம்ப கட்ட விசாரணை முடிந்த பின் வழக்கு பதிவு குறித்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நவம்பர் 9 வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages