ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணையில், 'இலவச அரிசி திட்டம்' வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு மட்டுமே அளிக்க வேண்டுமென்ற கருத்தினை நீதிமன்றம் நேற்று முன்வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண்டுக்கு சுமார் 2,110 கோடி ரூபாய் வரை விலையில்லா அரிசி திட்டத்துக்காக செலவிடப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, விலையில்லா அரிசிக்காகச் செலவுசெய்த பணத்தை உள்கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கலாம். அப்போது அனைவரும் பயனடைந்திருப்பார்கள். தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை அறிவித்து மக்களைக் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டீர்கள் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே விலையில்லா அரிசி வழங்கினால் ஆகும் செலவுகுறித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச ரேஷன் அரிசி விவகாரம்-சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment