மன்னார்குடியில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை மறித்த பொதுமக்கள் - Agnipuratchi

மன்னார்குடியில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை மறித்த பொதுமக்கள்

Share This

புயலால் சேதமடைந்த மன்னார்குடி 33வது வார்டு பகுதியில் சாய்ந்த மின்கம்பங்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனையடுத்து, அந்த வழியாக சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் காரை பொதுமக்கள் மறித்து நிறுத்தினர். காரை முன்னே நகர விடாமல் கோஷமிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் 🚗காரிலிருந்து இறங்கினார் அமைச்சர். உடனே அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தங்களது குறைகளை கூற துவங்கிவிட்டனர். நெடுவாக்கோட்டை பகுதியில் உள்ள மின்கம்பங்களை எடுத்து வந்து மன்னார்குடியில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கடைசியில் மின் விநியோகம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பதாக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்ததால் அவரது கார் செல்ல வழிவிடப்பட்டது. அத்துடன் சாலை மறியலும் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages