இலவச காலணி திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - Agnipuratchi

இலவச காலணி திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Share This

2018-19ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின்கீழ் 59 லட்சத்து ஒன்பதாயிரம் ஜோடி காலணி கொள்முதல் செய்வதற்கான டெண்டரை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் உள்ள ஷாம்சன் பாலிமர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், 114 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரை, விதிகளை மீறி, வெளிப்படைத்தன்மையின்றி இறுதி செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனவே, டெண்டர் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், டெண்டர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் நீதிபதி அனுமதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages