சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருநங்கைகளையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசிற்கு திருநங்கை ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த திருநங்கை மோனிகா செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது கடந்த ஆண்டு மண்டல பூஜையின் போது மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றேன். 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு நெய் அபிஷேகம் செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கையில் கேரள போலீசார் எச்சரிக்கை⚠ செய்து பம்பைக்கு கொண்டு வந்து விட்டு விட்டனர் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதே வேளையில் 3ம் பாலினத்தவர் சபரிமலை செல்லக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லாததால் தங்களை இந்த ஆண்டு சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேரள அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
சபரிமலை கோவிலுக்குள் திருநங்கைகளையும் அனுமதிக்க கோரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment