முறைகேடான தொலைப்பேசி இணைப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - Agnipuratchi

முறைகேடான தொலைப்பேசி இணைப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Share This

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்தது. முன்னதாக, குற்றச்சாட்டு பதிவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இதை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும், மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதியவும் உத்தரவிட்டது. வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி வசந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டது. உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறவே, அடுத்த விசாரணையின் போது உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு⚖ வழக்கின் விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages