ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொலை செய்ய காரணமாக இருந்ததாக காவல்துறை, வருவாய் துறையினருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் அப்போது காவல்துறை மற்றும் பொதுமக்கள் நடுவே மோதல் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர். பல பகுதிகளிலும் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் பிறகு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தற்பொழுது, 7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி, ஒரே திட்டத்தின் அடிப்படையில் கூட்டாக செயல்படுதல், வழிப்பறி, கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது சிபிஐ. காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment