ஆழ் கடலில் மூழ்கிய படகை 33 மீட்டர் ஆழத்தில் மீட்ட கடலோர காவல் படையினர்! பரபரப்பு காட்சிகள்...!! - Agnipuratchi

ஆழ் கடலில் மூழ்கிய படகை 33 மீட்டர் ஆழத்தில் மீட்ட கடலோர காவல் படையினர்! பரபரப்பு காட்சிகள்...!!

Share This

கடலூர் தாழங்குடா பகுதியில் இருந்து கடந்த 19ஆம் தேதி மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கரையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அவர்களது படகு பழுதாகி தண்ணீரில் மூழ்கியது. இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐந்து பேரையும் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் படகு முழுவதுமாக முழுகிவிட்டது. இந்தப் படகு மற்றும் வலையில் மதிப்பு ஆறு லட்ச ரூபாய் ஆகும். இதனிடையே இந்த மீனவர்கள் கடலூர் மாவட்ட கடலோர காவல் குழுமத்திடம் கோரிக்கையாக தங்களது வாழ்வாதாரம் கடலில் மூழ்கி விட்டதாகவும் அதனை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால் கடலோர காவல் ஆய்வாளர் சங்கீதா தலைமையில் கடலோர காவல் படையினர் இன்று புதுவையில் உள்ள ஸ்கூபா டைவிங் வீரர்கள் துணையுடன் இந்த படகினை மீட்பது முயற்சியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த மீட்பு பணியில் பல மணி நேரம் படகை கண்டுபிடிக்க முடியவில்லை ஏறத்தாழ 5 மணி நேரத்திற்கு பிறகு படகு தண்ணீரில் மூழ்கி இருக்கும் இடத்தினை ஸ்கூபா டைவிங் வீரர்கள் கண்டுபிடித்தனர். அதன்பிறகு 33 மீட்டர் ஆழத்தில் இருந்த இந்த படகினை தண்ணீரில் மூழ்கி சென்று 2 வீரர்கள் கயிறு கட்டி மற்றொரு படகில் இணைத்து அதனை மேலே கொண்டு வந்தனர்._

_அதன் பிறகு இந்த படகினை கரை வரை கொண்டு வந்த பிறகு தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கயிறு கட்டி கரைக்கு இழுத்தனர். ஏறத்தாழ எட்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த படகு கரைக்கு வந்து சேர்ந்தது. சிறிய பாதிப்புகளுடன் இந்த படகு வந்ததால் பழுது நீக்கி மீண்டும் கடலுக்கு செல்ல முடியும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சேவை மனப்பான்மையுடன் கடலோரக்காவல் குழுமத்தினர் பெரும் சிரமம் எடுத்து இந்த படகினை மீட்டது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே 33 மீட்டர் ஆழத்தில் இந்த படகினை மீட்கும் காட்சி வெளியாகிஉள்ளது.
https://youtu.be/UxKv35qIIeI

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages