தீபாவளி நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 330 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்! கடந்த ஆண்டு ரூ 260 கோடிக்கு மது விற்ற நிலையில், இந்த ஆண்டு ரூ 70 கோடி அதிகம்!
பட்டாசு வெடிப்பதற்கு தடை போடும் நீதிமன்றங்கள், டாஸ்மாக் விற்பனைக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தால் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஒதுங்கி கொள்ளும். அடுத்து வரும் செய்தியை கனத்த இதயத்துடன் படியுங்கள்.
அரசு இயந்திரத்தின் இமாலய சாதனை! கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
சனி - ரூ 124 கோடி
ஞாயிறு - ரூ 150 கோடி
திங்கள் - ரூ 148 கோடி
தீபாவளி நாளான நேற்று ரூ 180 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 34% கூடுதலாக மது விற்பனை அதிகரிப்பு - டாஸ்மாக் நிர்வாகம் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
இச் செய்தியை அக்னிப்புரட்சி இதழ் வேதனையுடன் பகிர்கிறது.
No comments:
Post a Comment