ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது குறித்து தமிழக அரசு விளக்கம் - Agnipuratchi

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது குறித்து தமிழக அரசு விளக்கம்

Share This

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அரசு சார்பில் நினைவிடம் அமைப்பது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன் படி, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா உட்பட மூன்று பேர் மீது தண்டனை உறுதிசெய்யப்பட்டாலும், ஜெயலலிதா இறந்துவிட்டதால் தண்டனை கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை எனவும், கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே நினைவிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் விதிமீறலோ அல்லது சட்டவிரோதம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பான விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages