கஜா புயல் -நாகை, கடலூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - Agnipuratchi

கஜா புயல் -நாகை, கடலூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Share This

கஜா புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கஜா புயல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என கடலூர் மாவட்டத்துக்கான சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தாழ்வான பகுதி மக்களை இன்று இரவுக்குள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும், மேலும் குடிசை வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கடலூர் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages