அமைச்சர் முன்னிலையில் அதிமுக'வினர் அடிதடி - Agnipuratchi

அமைச்சர் முன்னிலையில் அதிமுக'வினர் அடிதடி

Share This

திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் அதிமுக'வினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் மருதுராஜ் பேசியபோது, கட்சி நிர்வாகிகள் சிலர் குறுக்கிட்டு பேச்சை நிறுத்துமாறு கூறினர். பின்னர், சத்துணவு ஊழியர் நியமனம் தொடர்பாகவும், நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத்தேர்தலில் குளறுபடி நடந்ததாக கூறி அமைச்சர் சீனிவாசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அமைச்சர் முன்னிலையிலேயே இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages