கஜா புயல் காற்று காரணமாக விமான சேவைகள் பாதிப்பு - Agnipuratchi

கஜா புயல் காற்று காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

Share This

திருச்சியில் கஜா புயல் காரணமாக அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் பலத்த காற்று காரணமாக தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 3 முறை வானில் வலம் வந்தும் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து பயணிகளுடன் அந்த விமானம் சென்னைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. வானிலை சீரடைந்த பின்பு விமானம் மீண்டும் திருச்சி புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏஷியா விமானம் கொச்சியில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி வழியே செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages