நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பது குறித்த விவகாரம்-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - Agnipuratchi

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பது குறித்த விவகாரம்-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Share This

மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதனை மீறி செங்கற்சூளைகளுக்கு சட்ட விரோதமாக அதிகளவில் வண்டல் மண் அள்ளப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து இன்று நடந்த விசாரணையில், அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவை தாண்டி சட்ட விரோதமாக லாரி லாரியாகவண்டல் மண் எடுக்கப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க எந்த விதிகளின் கீழ் அனுமதி அளிக்கப்படுகிறதுஅனுமதி வழங்கும் அதிகாரி யார்என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages