நாளை புதிய கட்சி அறிவிப்பு! இயக்குனர் கவுதமன் - Agnipuratchi

நாளை புதிய கட்சி அறிவிப்பு! இயக்குனர் கவுதமன்

Share This

தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான கவுதமன் கனவே கலையாதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

மக்கள் தொலைக்காட்சிக்காக வீரப்பனின் வாழ்க்கை வரலாறை சந்தனக்காடு நெடுந்தொடராகவும், ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாற்றை தொடராகவும் எடுத்திருந்தார். 

தமிழ் திரைப்பட இயக்குனர் என்பதைத் தாண்டி  தமிழ் உணர்வாளராகவும் அறியப்பட்ட இவர், தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். 

தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த கவுதமன், தனது பொதுவாழ்க்கையை அரசியல் கட்சி மூலம் விஸ்திகரிப்பு செய்ய உள்ளார். மக்களுக்காக தொடர்ந்து களத்தில் செயல்படுவதற்காக கவுதமன் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். இந்த அரசியல் கட்சி நவம்பர் 11ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages