ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை -அண்ணன் மகள் தீபா பேட்டி - Agnipuratchi

ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை -அண்ணன் மகள் தீபா பேட்டி

Share This

சர்கார்’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள வில்லி கதபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்று அதிமுக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அது அவருடைய இயற்பெயர் இல்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி இல்லை என கூறியுள்ளார். ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவரை என் தந்தை அம்மு என்றே செல்லமாக அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள் என்று கூறியுள்ளார். மேலும், இது குறித்து டி.டி.வி. தினகரன் கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயரே இல்லை எனவும், படத்தில் ஜெயலலிதா குறித்த தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages