ஸ்டர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து ஆய்வு குழு அறிக்கை தாக்கல் - Agnipuratchi

ஸ்டர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து ஆய்வு குழு அறிக்கை தாக்கல்

Share This

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் போராட்டத்தினை அடுத்து, தமிழக அரசு ஆலையை மூடிசீல் வைத்தது. இதனை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்ததையடுத்து, ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து அறிக்கையின் தாக்கலை ஆய்வு குழு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், நிர்வாகத்திற்கு வாய்ப்பு தராமல், நோட்டீஸ் அனுப்பாமல் ஆலை மூடப்பட்டுள்ளது. மேலும், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிக்கையின் நகலை தமிழக அரசுக்கு அளித்து, உரிய பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. குழு அறிக்கை மீது எந்தவொரு தகவலையும் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages