நாகை மாவட்டம்-புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - Agnipuratchi

நாகை மாவட்டம்-புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Share This

புயல் பாதித்த இடங்களை பார்வையிட நேற்று ரயில் மூலம் நாகைக்கு முதல்வர் பழனிசாமி கிளம்பினார். இன்று அங்கு சென்றடைந்த முதல்வர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களின் புகைப்படத்தை பார்த்தார். அதன் பின், மக்களுக்கு 27 வகையான நிவாரணபெருட்களை வழங்கியதோடு, புயலால் உயிரிழந்தோரின் குடுமபத்தினருக்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கியுள்ளார். இதனை அடுத்து மீட்பு பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான சண்முகம் என்பவரின் மனைவிக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். கருணை அடிப்படையில் சண்முகம் மனைவி வனிதாவுக்கும் பணி நியமன ஆணையை அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages