டெல்டா பகுதிகளில் ஆய்வு-மத்திய குழு தமிழகம் வருகை - Agnipuratchi

டெல்டா பகுதிகளில் ஆய்வு-மத்திய குழு தமிழகம் வருகை

Share This

கஜா புயல் சேதங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். அதன் படி, இன்று மாலை புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரை சந்தித்த பின்னர் இந்த குழுவின் பணிகள் துவங்கும். குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் மற்றும் அதிகாரிகள் நவம்பர் 25 மற்றும் 26ம் தேதி புயல் பாதித்த டெல்டா பகுதியில் ஆய்வு செய்கின்றனர். நவம்பர் 27ல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages