பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜன,9ம் தேதி தொடங்குகிறது.பொங்கலையொட்டி ஜன.11 முதல் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைப்பு பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு ஜன.17 முதல் ஜன.20 வரை பேருந்துகள் இயக்கப்படும்.
பிற முக்கிய ஊர்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 7841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும்
பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கம்
பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்
தாம்பரம் சானிடோரியத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்
மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்
கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கம் - தமிழக அரசு.
No comments:
Post a Comment