சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடத்தல் தங்கம் கைமாறுவதாக, கடந்த மாதம் 30ஆம் தேதி வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனை நடத்தியதில் 7 கிலோ தங்கம், 11 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது, 5 பேர் கைது⛓ செய்யப்பட்டனர். ஹவாலா பணம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பாலாஜி குழும நிறுவனங்களின் உரிமையாளர் சீனிவாச ரெட்டி என்பவருக்கு தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதை அடுத்து சென்னை தியாகராயநகரில் உள்ள சீனிவாச ரெட்டியின் வீடு, அலுவலகம், பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலை ஆகிய 40 இடங்களில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். நான்காவது நாளாக நடத்திய சோதனையில், கணக்கில் வராத 110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கான ஆவணங்கள், 54 கோடியே 60 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அவற்றை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
பாலாஜி குழுமம் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனை-ரூ.110 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது
பாலாஜி குழுமம் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனை-ரூ.110 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment