தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த போரட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி பகுதியில் உள்ள தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 5 வழக்குகள் ஒரே வழக்காக விசாரிக்க சிபிசிஐடி'க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அதற்கான ஆவணங்களை சிபிஐ'போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி பெற்றது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.
Home
அண்மை செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு-ஆவணங்களை சி.பி.ஐ போலீசாரிடம் ஒப்படைத்தது சி.பி.சி.ஐ.டி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு-ஆவணங்களை சி.பி.ஐ போலீசாரிடம் ஒப்படைத்தது சி.பி.சி.ஐ.டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment