சென்னை விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி மதிக்கத்தக்க தங்கம் பறிமுதல் - Agnipuratchi

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.12 கோடி மதிக்கத்தக்க தங்கம் பறிமுதல்

Share This

கோவையில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, கோவையில் இருந்து வந்த இலங்கையை சேர்ந்த முகமது ரேலி (35) என்பவரை சோதனை செய்ததில் 14 தங்க கட்டிகள் இருந்தன. இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது, விமானத்தில் உள்ள கழிவறையில் இந்த பார்சல் இருந்ததால் எடுத்து வந்ததாக கூறினார். இதையடுத்து ரு. 52.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதே போல், குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் ஏறி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது எல்லா பயணிகளும் இறங்கிய பின் ஒருவர் மட்டும் இறங்காமல் இருக்கையின் அடியில் ஏதோ செய்துக் கொண்டு இருந்தார். அவரிடம் விசாரித்ததில் ரூ.49.50 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க கட்டியை வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது⛓ செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages