ஆழ்கடல் மீனவர்களை கண்டறியும் வகையில் ஜி.பி.எஸ். கருவிகள்-முதல்வர் வழங்கினார் - Agnipuratchi

ஆழ்கடல் மீனவர்களை கண்டறியும் வகையில் ஜி.பி.எஸ். கருவிகள்-முதல்வர் வழங்கினார்

Share This

புயல், மழைக் காலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைத் தொடர்பு கொள்ளவும், அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறியவும் சேட்டிலைட் போன்கள், ஜி.எபி.எஸ் கருவிகள் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 3 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் 181 சேட்டிலைட் போன்கள், 240 நேவிக் கருவிகள், 160 நேவ்டெக்ஸ் கருவிகள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு, முதற்கட்டமாக 21 சேட்டிலைட் போன்களை 20 லட்சம் ரூபாய்க்குத் தமிழக அரசு வாங்கியுள்ளது. 240 நேவிக் கருவிகளை இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், 160 நேவ்டெக்ஸ் கருவிகளை வெளிநாட்டில் இருந்தும் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் 15 முதல் 20 படகுகள் கொண்ட ஒரு குழுவுக்கு 2 சேட்டிலைட் போன்கள், 3 நேவிக் கருவிகள், 2 நேவ்டெக்ஸ் கருவிகள் என்ற கணக்கில் வழங்கப்பட உள்ளன. இதன் முதல் கட்டமாக மீனவர்களுக்கு சேட்டிலைட் போன்கள் உள்ளடக்கிய ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages