சபரிமலைக்கு சென்ற 11 சென்னை இளம்பெண்கள்-தடுத்து நிறுத்திய கேரள போலீஸ் - Agnipuratchi

சபரிமலைக்கு சென்ற 11 சென்னை இளம்பெண்கள்-தடுத்து நிறுத்திய கேரள போலீஸ்

Share This

சபரிமலைக்கு அனைத்து வயது இளம் பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ, மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ள குழுவில் 15 இளம் பெண்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டது. சென்னை, மதுரை, ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளாவைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இளம் பெண்கள் வருவதாக தகவல் வெளியானதையடுத்து பத்தனம்திட்டா மற்றும் கோட்டயத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இளம் பெண்கள் வந்தால் தடுப்போம் என்று ஐயப்ப தர்ம சேனா, சபரிமலை கர்ம சமிதி உட்பட பல்வேறு அமைப்பினர் கூறியிருந்தனர். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த 11 இளம்பெண்களை பம்பையில் வைத்து கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பக்தர்களுடன் கேரள போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages