ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதில் வரி ஏய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு உத்தரவுப்படி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். இதுகுறித்து அசோசெம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் ஜான் ஜோசப் கூறியுள்ளதாவது, "நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வரி ஏய்ப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். இதன் பலனாக ஏப்ரல் முதல் நவம்பர் வரை 12,000 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரிகள் ஆணையம் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து மோசடி செய்யப்பட்ட 8,000 கோடி மதிப்பிலான வரிகளை அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர். ஜிஎஸ்டியில் இணைந்துள்ள 1.2 கோடி பேரில் 5 முதல் 10 சதவீதம் பேர் வரி மோசடி செய்துள்ளனர். இது அவர்களது தொழில் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது. வரி மோசடிகளை தடுக்க புதிய வழிகளை புகுத்த வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி., வரி ரூ.12000 கோடி வரி ஏய்ப்பு-வரிகள் ஆணைய அதிகாரி ஜான் ஜோசப்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment