சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை விதித்த சென்னை ஐகோர்ட், இது தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டது.
சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேலின் பணியை ஓராண்டு நீட்டிக்கவும் உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment