விரைவில் வெளிவரவிருக்கும் புதிய ரூ.20 நோட்டு-ஆர்பிஐ - Agnipuratchi

விரைவில் வெளிவரவிருக்கும் புதிய ரூ.20 நோட்டு-ஆர்பிஐ

Share This

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 12 மணிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. அதன் பின் புது 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டது. மேலும் அண்மையில், ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது கூடுதல் வசதியுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனினும், பழைய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages