ஜனவரி 2ம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் - Agnipuratchi

ஜனவரி 2ம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

Share This

திமுக கட்சிக் கொறடாவான சக்கரபாணி அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் ஜனவரி 2 மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் கஜா புயல் நிவாரண உதவி, கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், லோக் ஆயுக்தா உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி இருக்கவேண்டும் என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages