பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு செய்யப்பட்ட அன்றே வழங்கும் புது வசதி-தமிழக அரசு - Agnipuratchi

பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு செய்யப்பட்ட அன்றே வழங்கும் புது வசதி-தமிழக அரசு

Share This

பத்திரப்பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கக்கூடிய ஆவணங்களை உரிய நபரிடம் பதிவு செய்யப்பட்ட அன்றே வழங்கும் புதிய வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஸ்டார் 2 பாய்ண்ட் ஜீரோ திட்டத்தின் மூலம் கடந்த 27ஆம் தேதி வரை 22 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் இணையம் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்துடன், கடந்த 17ஆம் தேதி முதல் பதிவு செய்த அன்றே திரும்பி வழங்கக் கூடிய ஆவணங்களை உடனுக்குடன் ஸ்கேன் செய்த பின் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன்மூலம் சுமார் 60 சதவீத ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பிக் கொடுக்கப்படுவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. ஆவணங்களைத் திரும்பப் பெற, அங்கீகாரம் பெற்ற நபரின் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் சிரமம் இருந்தால், பத்திரப்பதிவுத்துறை கட்டணமில்லா சேவை எண் 1800 102 5174ல் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages