வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-அடுத்த 3 நாட்களுக்கு கனமழை - Agnipuratchi

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

Share This

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 4, 5, 6 ஆகிய தினங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் மேலும் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளை பொறுத்தவரை பருவமழையானது பிற்பகுதியில் கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages