ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளர் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதம் காட்டி வருவதாகவும், அவர்கள் விடுதலை குறித்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்றும் மதிமுக தலைவர் வைகோ தெரிவித்தார். மேலும் ஆளுநரின் இந்த தாமதத்தை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை நோக்கி அவர் தலைமையில், எதிர்கட்சிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்க கூடாது. 7 பேர் விடுதலை குறித்து உடனடி தீர்வு தேவை. இதற்காக தான் இந்த போராட்டம். இந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முழு ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கிறார். எங்கள் போராட்டத்தை தடுத்தால், மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்கும். இது என் எச்சரிக்கை என்று ஆவேசமாக பேசினார். மேலும், "பிரதமா் நரேந்திர மோடி எப்படி நாட்டிற்கு சாபக்கேடோ அதே போன்று தமிழகத்திற்கு ஆளுநா் பன்வாரிலால் புரோகித் ஒரு சாபக்கேடு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் ஆளுநருக்கு எதிராக கோஷங்களையிட்டு தற்போது போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வீடியோ பதிவு இதோ
http://v.duta.us/FDtT5AAA
தமிழகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் ஓர் சாபக்கேடு -வைகோ ஆவேசம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment