திமுக சார்ப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற மூன்று முழக்கங்களை முன் வைத்துத்தான் திமுகவின் செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே ஜனவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் 12,617 ஊராட்சிகளிலும் நடைபெறும் இந்தக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் ஸ்டாலினும், ஈரோடு மாவட்டத்தில் பொருளாளர் துரைமுருகனும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு-வும் தொடங்கி வைக்கின்றனர். இப்பிரச்சாரத்தின் போது தலைமைக் கழகத்தின் சார்பில் தயாரித்து வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும் - மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment