பூடானுக்கு இந்தியா 4,500 கோடி உதவி-பிரதமர் மோடி - Agnipuratchi

பூடானுக்கு இந்தியா 4,500 கோடி உதவி-பிரதமர் மோடி

Share This

பூடான் பிரதமராக லோட்டே ஷெரிங் கடந்த மாதம் பதவி ஏற்றார். அவர் இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் வந்தார். டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். அதன்பின் பிரதமர் மோடி, லோட்டே ஷெரிங் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடி பேட்டியளித்தார். அதில் அவர் நீர் மின்சக்தி திட்டத்தில் பூடானுடன் இணைந்து செயல்படுவது இருதரப்பு உறவில் முக்கிய அம்சம். மாங்தேச்சு திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும். பூடான் வளர்ச்சியில், இந்தியா நம்பிக்கைக்குரிய நண்பனாக முக்கிய பங்கு வகிக்கும். பூடானின் 12வது ஐந்நாண்டு திட்டத்துக்கு இந்தியா ரூ.4,500 கோடி நிதியுதவி அளிக்கும் என உறுதி அளித்துள்ளேன்’’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages