ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்-ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்த வழக்கு ரத்து⁉ - Agnipuratchi

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்-ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்த வழக்கு ரத்து⁉

Share This

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீதிமன்றம் சரமாரியாக தமிழக அரசிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது வருமான வரித்துறை சோதனை நடத்தி ஓராண்டான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னஆகிய கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நரசிம்மன் யார்என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ரூ 89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையை கண்காணித்து அறிக்கை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தாதது ஏன்என்றும் கேள்வி எழுப்பியது. அதன்பின்னர், டிசம்பர் 17ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்ட⚖ உயர்நீதிமன்றம் இதன் விசாரணையினையும் அன்றே நடக்கும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages