பேராசிரியர்களின் சான்றிதழ்களை ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு - Agnipuratchi

பேராசிரியர்களின் சான்றிதழ்களை ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

Share This

தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை, அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களின், அசல் சான்றிதழ்களை கல்லூரிகள் வைத்திருப்பது சட்டப்படி தவறு என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. பேராசிரியர்களின் சான்றிதழ் நகல்களை வைத்துக் கொண்டு, அசல் சான்றிதழ்களை திருப்பிக் கொடுத்துள்ளதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அசல் சான்றிதழ்களை பேராசிரியர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதை, வரும் 17ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையாக ஒவ்வொரு உறுப்பு பொறியியல் கல்லூரிகளும் தாக்கல் செய்ய, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages