சாகித்ய அகாடமி விருது பெற்ற மகிழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணன் - Agnipuratchi

சாகித்ய அகாடமி விருது பெற்ற மகிழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணன்

Share This

இந்திய எழுத்துலகில் சிறந்தவர்களை அங்கீகரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் மற்றும் புதிய விசயங்களை ஏற்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடெமி, இந்தாண்டு சிறந்த எழுத்தாளருக்கான விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், 25 ஆண்டுகளாக எழுத்துலகில் இருக்கும் எனக்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது பெற்ற மகிழ்ச்சியை நாதஸ்வர கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்வேன். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பற்றி பேசும் வகையில் எனது இந்த சஞ்சாரம் என்ற நாவல் அமைந்துள்ளது. நாதஸ்வர கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி இதனை எழுதியுள்ளேன். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வில் நிகழும் துயரங்களை வைத்து இந்த நாவலை எழுதினேன். இதனை எழுதி முடிக்க எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது" என்று அவர் தெரிவித்தார். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages