அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினையடுத்து எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடந்தேறியது. அப்போது, சபரிமலை பகுதியில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை விலக்கக் கோரி, திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பு, பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில், வேணுகோபால் என்பவர் தீக்குளித்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாநில அரசே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டிய பாஜகவினர், இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கு பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதோடு, பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சபரிமலை விவகாரம்-பா.ஜ.க., சார்பில் முழு அடைப்பு போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment